பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. அனைத்து விவாதங்களும் நடந்து முடிந்த பிறகு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிப்ரவரி 13 அல்லது 14ம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
















