சென்னையில் தமிழக பாஜக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்துக்களை பெறுவதற்கான வாகனங்களின் பயணத்தை பாஜக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.
சென்னை அமைந்தகரையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் மக்களுக்காக, மக்களிடமிருந்து எனும் கருத்து கேட்பு இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மக்களிடம் கருத்துக்களை பெறுவதற்கான வாகனங்களின் பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த வாகனங்கள் 39 மாவட்டங்களில் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளன. தொடர்ந்து இதன் மூலம் பெறப்படும் கருத்துக்களின் படி பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுகவினர் மொழியை வைத்து ஆட்சி செய்யலாம் என நினைப்பதாகவும் இனி அது நடக்காது எனவும் தெரிவித்தார். தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் பாஜக எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
















