பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தேசியத் தலைவர்கள் தமிழகம் வருவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தமிழகத்திற்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் முயல்வதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியவர் பிரதமர் மோடி என்றும், ராஜேந்திர சோழனை நேரில் வந்து வணங்கிச் சென்றவர் பிரதமர் மோடி என்றும் தெரிவித்தார்.
பிரதமர் வந்ததிலிருந்து முதல்வர் குழம்பிப் போயுள்ளார் என்றும், முதல்வருக்கு என்.டி.ஏ.வாலும் டென்ஷன், இண்டி கூட்டணியாலும் டென்ஷன் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.
















