தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் வெண்கல சிலை உட்பட மூன்று சிலைகளை ஒப்படைக்க, அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலத்துாரில் உள்ள விஸ்வநாதர் கோயிலில், சிவன், பார்வதி ஆகியோருடன் முருகன் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தர் சிலை, சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான ஆவணங்களை தமிழக போலீசார், அமெரிக்க அரசிடம் சமர்பித்தனர்.
ஆவணங்களை சரிபார்த்த அந்நாட்டு அதிகாரிகள், சோமாஸ்கந்தர் சிலை மட்டுமின்றி, தமிழகத்திற்கு சொந்தமான சுந்தர மூர்த்தி நாயனார், பரவை நாச்சியார் மற்றும் சிவ நடராஜர் சிலைகளை ஒப்படைக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















