இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.
இருபது ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து, காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வந்தது.

இந்நிலையில், முந்தைய UPA ஆட்சிக் காலத்தைப் பற்றி பேசிய பியூஷ் கோயல், காங்கிரஸ் அரசுக்கு இதுபோன்ற சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட போதுமான தைரியம் இல்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும், அவர்களால் அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்று விமர்சித்த அவர், இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் துணிச்சல் அவர்களிடம் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
















