நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தனியார் கல்லூரியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாககூறி, கட்டத்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையத்தில் செயல்படும் எக்ஸல் கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாகா உள்ளிட்ட வெளிமாநில மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாகவும், அதனை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக புகாரளித்தும் நடவடிக்கை இல்லையெனக்கூறி, கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் சிலர், கல்லூரியின் கட்டடத்தில் இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
















