சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக உறவை கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் புதிய வா்த்தக கொள்கைகள் மற்றும் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, தென் கொரியா, கனடா, பின்லாந்து போன்ற நாடுகளைத் தொடா்ந்து பிரிட்டனும் சீனாவுடன் நெருக்கமான உறவை வளா்க்க முன்வந்துள்ளது.
அதன்படி 8 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டன் பிரதமர் கியா் ஸ்டாா்மா், சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். சுமாா் 80 நிமிடங்கள் நீடித்த இருதரப்பு ஆலோசனையில், வா்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தங்களது நேச நாடுகள் சீனாவுடன் வர்த்தகத்துக்கு நட்புக்கரம் நீட்டுவது அமெரிக்காவை கடுமையாக எரிச்சலடைய செய்துள்ளது.
இந்நிலையில் சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக உறவை கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், சீனாவை பற்றி தனக்கு நன்றாக தெரியும் எனவும், சீனாவை ஒரு தீர்வாக பார்க்க முடியாது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
















