திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இருவர், எரியும் குப்பையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவிநாசியை சேர்ந்த 13 வயது சிறுவன், குன்னத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மாணவரை சக மாணவர்கள் இருவர், சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி கிண்டலடித்ததாக கூறப்படுகிMறது.
இதனை தொடர்ந்து 2 மாணவர்களும், அந்த மாணவனின் கைகாலை பிடித்து, எரியும் குப்பையில் தூக்கி வீசியுள்ளனர்.
இதில் தீக்காயம் அடைந்த மாணவர், பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாணவனின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
பள்ளி ஆசிரியர்களும் தனது மகனை கிண்டல் செய்வதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
Video Link:
















