மதுரையில் உள்ள ஆயிரத்து 856 பூத்களில் 15 நாட்களுக்குள் ஏஜெண்டுகளை நியமிப்போம் என திமுக எம்எல்ஏ தளபதிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் நல்லமணி பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட தலைவராக நல்லமணி அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட தலைவருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்த திமுக எம்எல்ஏ தளபதியின் அலுவலகம் முன்பு உள்ள தங்கு விடுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மதுரைக்கு நிச்சயம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார் என்றும், 20 கவுன்சிலர்கள் வெற்றி பெறுவார்கள் எனவும் கூறினார்.
காங்கிரஸ் குறித்து கேலி செய்பவர்களுக்கு செயல் மூலம் தக்க பதில் தருவோம் என தெரிவித்தார்.
















