பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
Mar 20, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

Manikandan by Manikandan
Feb 2, 2026, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக, பாதுகாப்புத்துறைக்கு கடந்த நிதியாண்டைவிட 15 சதவிகிதம் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுவரை இல்லாத அளவாக பாதுகாப்புத்துறைக்கு ஏழு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 2021-22ம் ஆண்டில் 4.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில்,2022-23ம் ஆண்டில் 5.25 லட்சம் கோடியாக அதிகரித்தது…

2023-24ம் ஆண்டில் 5.94 லட்சம் கோடியாகவும், 2024-25ம் ஆண்டில் 6.20 லட்சம் கோடியாகவும் இருந்தது…

2025-26ம் ஆண்டில் 6.81 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2026-27ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் 7.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 சதவிகிதம் கூடுதலாகும்…(NEXT)
ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்த 2 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21.84 சதவிகிதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று ராணுவ பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட அன்றாட செலவினங்களுக்கு மூன்று லட்சத்து 65 ஆயிரத்து 478 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ ஓய்வூதிய திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 338 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்புத்துறையில் இறக்குமதி செய்யப்படும் போர் விமான உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை எட்டவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், பட்ஜெட் உந்துதலாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பாதுகாப்பு மூலதனச் செலவினம் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 1.80 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது, 28 சதவிகிதம் அதிகரித்து 2.31 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நவீனரக ஆயுத அமைப்புகளை கொள்முதல் செய்வதிலும், உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்துவதை மூலதன செலவானது பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்மர் பாரத் அல்லது ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு ஆகியவற்றில் மத்திய அரசு அளிக்கும் முன்னுரிமையையும், முக்கியத்துவத்தையும் பிரபலிக்கிறது…

உண்மையில், பாதுகாப்பு உற்பத்தி சாதனை அளவைத் தொட்டு வருவதால், மிகப்பெரிய பாதுகாப்பு மூலதனச் செலவு ஏற்படுகிறது.

2024-25 நிதியாண்டில், ராணுவ தளவாட உற்பத்தி 1.54 லட்சம் கோடியைத் தொட்டது.

2023-24 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 1.27 லட்சம் கோடியாக உயர்ந்தது.

2014-15 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது வெறும் 46 ஆயிரத்து 429 கோடியாக இருந்த நிலையில், தற்போது ராணுவ தளவாட உற்பத்தி 174 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருப்பதை இது காட்டுகிறது..

2024-25 நிதியாண்டில் ராணுவ தளவாட ஏற்றுமதி 23 ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன.

பிரான்ஸ் மற்றும் ஆர்மீனியா போன்ற நாடுகளுக்கான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, ஆகாஷ் எஸ்ஏஎம் அமைப்பு மற்றும் பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிகளில் அடங்கும்…

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் உயர்ந்த வண்ணம் உள்ளது..

எனினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக பாதுகாப்பு செலவினம், பல ஆண்டுகளாக குறைந்தே வந்துள்ளது.

குறிப்பாக 2025-26ம் ஆண்டில் பாதுகாப்புத்துறைக்கு 6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.9 சதவிகிதமாகவே இருந்தது.

Tags: budget 2026pakistanArmyNirmala Sitharamanindian armyIndian
ShareTweetSendShare
Previous Post

மகாதேவர் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நூதன போராட்டம்!

Next Post

தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு நடக்காததால் அரசுக்கு இழப்பு – யார் பொறுப்பு?

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies