ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வான்வழி தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில் திட எரிபொருள் குழாய் பொருத்தப்பட்ட ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
நீண்ட தூர இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளின் உருவாக்கத்தில் SFDR என்ஜின் தொழில்நுட்பம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஒலியை விட வேகமாக ஏவுகணைகளை செலுத்த உதவுகிறது. அந்த வகையில் SFDR என்ஜின் ஏவுகணையானது, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இதன் மூலம் நீண்ட தூரத்தில் இருக்கும் போர் விமானங்களை இனி துல்லியமாகத் தாக்க முடியும் என DRDO பெருமிதம் தெரிவித்துள்ளது.
















