இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Feb 5, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் சடடமன்ற  தேர்தலைச் திமுக சந்திக்கப் போவதாக  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணம், காவல் மரணம் எனவும், அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒன்றுமே இல்லாத வழக்கில் அப்பாவி ஒருவரைக் காவலர்கள் அநியாயமாக அடித்துக் கொலை செய்துவிட்டனர் என நீதிபதி காட்டம் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடப்பது மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? என்றும அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வரும் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் துருவித் துருவி விசாரித்து அவர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் திமுகவின் ஏவல்துறை, அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன? என்றும் அவர் வினவியுள்ளார்.

புகாரின் பின்னணியையும் உண்மைத் தன்மையையும் முழுதாக ஆராயாமல் கையில் கிடைத்த அப்பாவியைக் கம்பால் அடித்தே கொலை செய்யுமளவிற்குக் காவலர்களின் இதயம் மரத்துப் போய்விட்டதா? மூளை மழுங்கிவிட்டதா? அல்லது மேலிடத்திலிருந்து அத்தனை அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை வரை சென்ற முதல்வர் ஸ்டாலின் , தமது ஏவல்துறையின் மூர்க்கத்தனத்தால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் சொல்லாதது ஏன்?  உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றன.

இவை அனைத்திற்குமான விடைகள் வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் கிடைக்கும்! ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் திமுகவின் காட்டாட்சி விரட்டியடிக்கப்படும் என்றும் நயினார் குறப்பிட்டுள்ளார்.

Tags: bjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainartirupuvanam murder caseNainar NagendranNainar Nagendran speechAjith Kumar murder casenainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான் – சாலமன் பாப்பையா

Next Post

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

Related News

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

‘சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!

பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

தங்கள் பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 3 சிறுமிகள் குதித்து தற்கொலை!

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம்!

வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு – பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான் – சாலமன் பாப்பையா

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

வேகமாக வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 4 பேர் படுகாயம்!

சட்டவிரோத மது விற்பனை – காவல்துறையினர் உடந்தை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies