சேலம் கோட்டை பகுதியில் இஸ்லாமியருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் புகுந்த திமுகவினர், அங்கிருந்தவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
கோட்டை பகுதியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. மண்டபத்தின் செயலாளர் நௌமானுக்கும், திமுக பிரமுகர் இப்ராஹிம்-க்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடியாட்களுடன் மண்டபத்தில் புகுந்த இப்ராஹிம், நௌமானை சராமரியாக தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த அவர் சரிந்து கீழே விழுந்தார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
படுகாயமடைந்த நௌமானை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே திமுக நிர்வாகி இப்ராஹிமை கைது செய்ய வலியுறுத்தி, சாதிக் பாஷா என்பவர், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
















