அமளி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இங்கு தற்போது அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவத்தார். திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டதாகவும் கூறினார்.
அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்னை குறித்து பேரவையில் நிச்சயம் பேசுவேன் என்றும் அவர் தெரிவத்தார்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
















