மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு வழங்க உள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில், தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் Ather நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின், மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐஐடி இயக்குனர் காமகோடி, இந்த மாநாட்டில் மாணவர்கள் தங்களது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில்கள் குறித்து வெளிபடுத்தலாம் எனவும், அந்த நிறுவனங்களுக்கு 600 கோடி ரூபாய் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
யுனிகார்ன் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து முதலீட்டு தொகையை வழங்க இருப்பதாக தெரிவித்த அவர், மாணவர்களின் திறனை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
















