கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் நல்லுறுவை பேணி வந்த மலேசியா, தற்போது இந்தியாவை உற்ற நண்பனாக பார்க்க தொடங்கியிருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் பிரதமர் மோடியின் நேர்மையான மற்றும் உறுதியான முடிவுகள் பிடித்துப்போக, பாகிஸ்தானை விட்டு கொஞ்சம் கொஞ்சமான விலக தொடங்கியிருக்கிறது.
1957 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் – மலேசியா இடையேயான உறவுகள் இரட்டை குழல் துப்பாக்கி போலவே இருந்து வந்துள்ளது. ராணுவம், வர்த்தகம் என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே மலேசியா இணக்கம் காட்டியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கம் நின்ற குரல் கொடுத்த மலேசியா, ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவை எதிர்த்து கேள்வி எழுப்பிய வரலாறெல்லாம் உண்டு. ஐநா சபைக்கூட்டத்தில் உரையாற்றிய மலேசியா முன்னாள் பிரதமர் மகதீர் முகமது, பாகிஸ்தானுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்ததை உதாரணமாக கூறலாம்.
இந்தியாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் விவகாரம் பூதாகரமான போது, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த மலேசியா, இன்னும் பல காட்டமான விமர்சனங்களையும் பொதுவெளியில் அள்ளி வீசியது.
இப்படி நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வந்த மலேசியா, தற்போது பாகிஸ்தானின் கோரமுகத்தை புரிந்துகொண்டு இந்தியாவின் நட்பை நாட தொங்கியிருக்கிறது.
அதன் வெளிப்பாடகவே பிரதமர் மோடியின் மலேசிய சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமும் புன்முறுவலுடன் நடத்திய பேச்சுகள், அவர்களுக்குள் மலர்ந்த நட்புறவை மட்டுமல்ல, இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டிருப்பதையே காட்டியது.
அதுவும் பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா கொண்டிருக்கும் சமரசமற்ற கொள்கையை, மலேசியாவும் இந்த முறை ஓங்கி ஒலித்தது, பாகிஸ்தானுக்கு நிச்சயம் அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கும். பயங்கரவாதத்திற்கு நிதி பகிரப்படுவதை தடுக்கவும், தீவிரவாதிகளை வேரறுக்கவும் தலைவர்கள் இருவரும் சூளுரைத்தனர், இனி நம் பப்பு வேகாது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருக்கும்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த இந்தியா எடுத்தும் வரும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே, இந்தியா – மலேசியா இடையே மலர்ந்திருக்கும் புதிய உறவு என கூறப்படுகிறது
நீண்ட காலம் பாகிஸ்தான் புராணம் பாடிய மலேசியாவை, இந்தியா தனது நட்பு நாடாக மாற்றியிருக்கிறதென்றால், இங்கு தான் பிரதமர் மோடியின் ராஜதந்திர நகர்வு வெளிப்படுகிறது.
பாகிஸ்தான் உடனான உறவால், உலக அரங்கில் அவமானம் மட்டுமே கிடைக்கிறது என்ற நிலையில் இருந்த மலேசியாவின் மனநிலையை சரியாக கணித்து, பிரிக்ஸ கூட்டமைப்பில் இணைய மலேசியா கொண்டிருக்கும் ஆர்வத்தை புரிந்து, கச்சிதமாக காய் நகர்த்தியிருக்கிறார் சாணக்கியர் மோடி என புகழாரம் சூட்டுகின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
















