மக்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்தாயிரம் ரூபாய் அல்ல 50 ஆயிரம் ரூபாய் வழங்கினாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை எனவும். 5 மாதத்திற்கான தொகையை வழங்கிய திமுக அரசு, முதல் இரண்டரை வருடத்திற்கான தொகையையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார்.
மக்களை ஏமாற்றும் விதமாக ஆயிரம் ரூபாய் வழங்குவதை மத்திய அரசு தடுப்பதாக தேர்தல் நேரத்தில் நயவஞ்சகமாக பேசக்கூடிய முதலமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது தமிழக மக்களின் சாபக்கேடு என்றும் அவர் தெரிவித்தார்.
















