அவதூறு வழக்கு - டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!
Apr 3, 2026, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்திய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கப்பல் வாங்கியது தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினார்.

கடந்த 2023 ஏப்ரல் 14ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, DMK FILES என்ற பெயரில் பலரின் சொத்து விவரங்களை வெளியிட்டார்.

அதில், திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தின் அனுமதியுடன் டி.ஆர்.பாலுவை அண்ணாமலை நேரடியாக குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது டி.ஆர்.பாலு 10 கப்பல்கள் வாங்கியதாக அழகிரி கூறியது குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பிய நிலையில்,

பத்து கப்பல்கள் வாங்கியதாக அழகிரி கூறியது தவறான தகவல் என்றும், தான் இரண்டு கப்பல்கள் மட்டுமே வாங்கியதாகவும் டி.ஆர்.பாலு பதிலளித்தார்.

தொடர்ந்து, டி.ஆர்.பாலு வைத்திருக்கும் 18 கார்கள், அவரது மகன் ராஜ்குமார் நடத்தும் கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலை உள்ளிட்டவை தொடர்பாக அண்ணாமலை சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

ஆனால், அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய டி.ஆர்.பாலு, தெரியாது, சரியல்ல என்று தனது பதில்களை சுருக்கமாக முடித்தார்.

தொடர்ந்து, டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினர் நடத்தும் சாராய ஆலை குறித்து அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு, அது சாராய ஆலை அல்ல; ரசாயன ஆலை என்று பதிலளித்த டி.ஆர்.பாலு,

அந்த ஆலையில் தான் சிறிய பங்குதாரர் மட்டுமே; அந்த நிறுவனம் தனக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்றும் கூறினார்.

பதிலுக்கு, அண்ணாமலை அவரது மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி இருப்பதாக குற்றம்சாட்டிய டி.ஆர்.பாலு,

ஊழல் முறைகேடு குற்றச்சாட்டால் தான் அண்ணாமலையின் மாநில தலைவர் பறிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட அண்ணாமலை, தவறான தகவல்களை வைத்து உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு மீது விரைவில் அவதூறு வழக்கு தொடரப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து குறுக்கு விசாரணை நிறைவடையாததால், வழக்கு விசாரணை ஏப்ரல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 

Tags: annamalai bjpbjp indiatn bjptr baludmk newssaidapettai courtcourtbjpannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசர கதியில் நடைபெறும் மின் இணைக்கும் பணிகள்!

Next Post

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

Related News

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies