சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், சாலையில் தர்பூசணி பழங்கள் விழுந்து வீணாகின.
திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கனை ஏற்றிக் கொண்டு, சேலத்தை நோக்கி சரக்கு வேன் சென்ற கொண்டிருந்தது.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது வாகனத்தில் இருந்த தர்பூசணி பழங்கள், சாலையில் கொட்டி வீணாகின. விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
















