இந்திய ராணுவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாக வெளியான வீடியோ போலியானது என்று மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. அதில் நம் ராணுவத்தில் இந்துக்கள் அல்லாதோரை நீக்காவிட்டால் பிரதமர் மோடி பதவிநீக்கம் செய்யப்படுவார் என பேசுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராயும் பணிகளில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் ஈடுபட்டது. இதனை போலி என உறுதி செய்த உண்மை கண்டறியும் குழு டிஜிட்டல் முறையில் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தது,
மேலும் பொய் தகவல்களை பரப்புவோர் குறித்து அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உண்மை கண்டறியும் குழு அறிவுறுத்தி உள்ளது.
















