அமைச்சர்கள் சிலரின் கருங்கல் குவாரிகளில் நடந்த விதிமீறல்களை சரிப்படுத்தவே, வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன்காரணமாக விதிமீறல் குவாரிகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
அரசின் இந்த வரன்முறையில், குவாரிகளில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கான தொகையை அபராதத்துடன் வசூலிப்பதற்கான வழிமுறை ஏதும் இல்லை என மணல், எம் – சாண்ட் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
இதனால் அரசுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் அரசின் இந்த வரன்முறை, கல்குவாரிகளை நடத்தும் அமைச்சர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
















