சட்டப்பேரவையில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், ஸ்டாலின் ஆட்சியை புகழ்ந்து தள்ளினார்.
பேரவையில் பேசிய அவர், காலை உணவுத் திட்டம், பெண்களின் வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் என திமுகவின் திட்டங்களையும், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியையும் பாராட்டினார். இறுதியாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியுடன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என ஐயப்பன் கூறினார்.
அதிமுக தொடங்கியது முதல் திமுகவை எதிர்த்து அரசியல் செய்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆசியுடன் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என ஐயப்பன் கூறியிருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
















