கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதிப்பெயர் இடம்பெற கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் சாதிப் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை நடத்தும் விழாவில், சாதி பெருமையை ஊக்குவிப்பதை அனுமதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு விட்டதாலும், விழா நாளை தொடங்கவுள்ளதாலும் இந்த ஆண்டிற்கு எந்த உத்தரவும் வழங்க இயலாது என குறிப்பிட்ட நீதிபதி,
இனிமேல் நடைபெறும் கோயில் விழாக்களின்போது அச்சிடப்படும் அழைப்பிதழ்களில் சாதி பெயர்கள் இடம்பெறக் கூடாதென ஆணையிட்டார்.
















