புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் செய்த அநாகரிக செயலை கண்டித்து நேற்று புதுச்சேரி பாஜக இளைஞரணியினர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் பதிலுக்கு முற்றுகையிட முயன்றதால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அங்கும் காங்கிரஸ் கட்சியினர் அத்துமீறியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர், அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
















