நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால் உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
சனிக்கிழமை என்பதால், ஆஞ்சநேயர் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
















