உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் மோடி உடன், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டெல்லி பிராந்திய போக்குவரத்து துறை அதிகாரிகள் இருந்தனர்.
ஷதாப்தி நகர் முதல் மீரட் தெற்கு வரையில் பிரதமர் மோடி ரயிலில் பயணித்தார். அவருடன் பயணித்த அதிகாரிகள் நமோ பாரத் ரயில் திட்டம் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.
அப்போது சக பயணிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
















