திமுக அரசு தமிழ்நாடு என்ற சொல்லையே அழிக்க நினைப்பதாக,
மதுரையில் நடைபெற்ற தாய்மொழி நாள் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது.
மதுரையில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்ற தாய்மொழி நாள் மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ்தேசிய இயக்கத்தினர் வருகைதந்து கருத்துரை வழங்கினர்.
அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை வைத்தால் மட்டும் போதாது, தமிழ் மொழியை வளர்க்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேருந்துகளில் இருந்து தமிழ்நாடு என்ற பெயர் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு என அண்ணா வைத்த பெயரையே திமுக அரசு அழிக்க நினைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
















