திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு அக்கட்சியினரே உறுதுணையாக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் ல் நடைபெறற கந்த சஷ்டி பாராயணம் நிகழ்வில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்த தொடங்கவில்லை என்றும், தொடங்கும் போது முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தமிழக வாக்காள பெருமக்கள் நிச்சயமாக நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்
















