திண்டுக்கல் அருகே, 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி அமைச்சர் ஐ.பெரியசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், கொட்டப்பட்டி, நல்லேந்திரபுரம், குட்டியபட்டி, பொன்மாந்துறை, புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், விழா முடிந்து அமைச்சர் ஐ.பெரியசாமி புறப்பட்டபோது, அவரை பெண்கள் முற்றுகையிட்டு, தங்கள் பகுதியில் நூறு நாள் வேலைவாய்ப்பு சரிவர வழங்கப்டவில்லை என முறையிட்டனர்.
















