மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமானநிலைய விரிவாக்க பணிக்காக, சின்ன உடைப்பு கிராமத்தில் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, மறுவாழ்வு நிலம் வழங்க வேண்டுமென நிலம் வழங்கியவர்கள், உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தகுதி உடையோருக்கு நிலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், நிலம் வழங்கிய மக்களுக்கு 2வாரத்தில் மறுவாழ்வு நிலம் வழங்க வேண்டுமெனவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து 2 வாரத்தில் கிராம மக்கள் வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
















