மதுரையில் நாளை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் 4 முக்கிய அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
நாடு முழுவதும் ஆயிரத்து 300 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை உள்ளிட்ட 8 நிலையங்களில், 100 கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையங்களில் புதிய நுழைவாயில்கள், மின் தூக்கிகள், மேம்பாலங்கள், விரிவான வாகன நிறுத்துமிடங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், மின்னணு தகவல் பலகைகள், பொது அறிவிப்பு அமைப்புகள் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுரையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள விழாவில், இந்த 4 ரயில் நிலையங்களும் காணொலி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படவுள்ளன.
















