விவாகரத்து கோரி விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் விஜய், தன்னையும், 2 வாரிசுகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஒரு நடிகையுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணித்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர், அந்தப் பயணங்களின் படங்களை நடிகை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் தனக்கும், குழந்தைகளுக்கும் அவமானம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
2021ல் நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனதளவில் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாக கூறியுள்ள அவர், தனக்கு தெரிந்த பிறகும், நடிகை உடனான முறையற்ற உறவை சிறிதும் தயக்கமின்றி விஜய் தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை உடனான தொடர்பை தட்டிக் கேட்டதால் தன்னை சுதந்திரமாக நடமாட விடவில்லை என்றும், பொருளாதார ரீதியாக விஜய் முடக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகை உடனான தொடர்பை நிறுத்திக் கொள்வதாக ஆரம்பத்தில் விஜய் வாக்குறுதி அளித்ததாகவும், வாக்குறுதியை மீறி நடிகை உடனான தொடர்பை விஜய் நீட்டித்தது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தேவையற்ற விளம்பரத்தை தவிர்க்கவும், அனைத்து தரப்பினரின் நற்பெயரை பாதுகாக்கவும், நடிகை பெயரை தற்போது குறிப்பிடவில்லை என்றும், நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும், கணவர் விஜய்-கும் இடையே தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன் எனவும் மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.
விஜயின் வருவாய் மற்றும் பொருளாதார அந்தஸ்துக்கு ஏற்ற வகையில் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள சங்கீதா, மனைவி என்ற உரிமையின் அடிப்படையில் வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து இந்த மனு செங்கங்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
















