வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் - விஜய் மனைவி தாக்கல் செய்த மனுவின் முழு விவரம்!
Sep 21, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் – விஜய் மனைவி தாக்கல் செய்த மனுவின் முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 07:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவாகரத்து கோரி விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் விஜய், தன்னையும், 2 வாரிசுகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஒரு நடிகையுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணித்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர், அந்தப் பயணங்களின் படங்களை நடிகை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் தனக்கும், குழந்தைகளுக்கும் அவமானம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2021ல் நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனதளவில் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாக கூறியுள்ள அவர், தனக்கு தெரிந்த பிறகும், நடிகை உடனான முறையற்ற உறவை சிறிதும் தயக்கமின்றி விஜய் தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை உடனான தொடர்பை தட்டிக் கேட்டதால் தன்னை சுதந்திரமாக நடமாட விடவில்லை என்றும், பொருளாதார ரீதியாக விஜய் முடக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை உடனான தொடர்பை நிறுத்திக் கொள்வதாக ஆரம்பத்தில் விஜய் வாக்குறுதி அளித்ததாகவும், வாக்குறுதியை மீறி நடிகை உடனான தொடர்பை விஜய் நீட்டித்தது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தேவையற்ற விளம்பரத்தை தவிர்க்கவும், அனைத்து தரப்பினரின் நற்பெயரை பாதுகாக்கவும், நடிகை பெயரை தற்போது குறிப்பிடவில்லை என்றும், நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும், கணவர் விஜய்-கும் இடையே தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன் எனவும் மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.

விஜயின் வருவாய் மற்றும் பொருளாதார அந்தஸ்துக்கு ஏற்ற வகையில் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள சங்கீதா, மனைவி என்ற உரிமையின் அடிப்படையில் வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து இந்த மனு செங்கங்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Tags: vijay wife divorce petition filedtvk vijaytvkVijay's wife SangeetaChengalpattu Family Welfare Court
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு படை ஆய்வு – பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு!

Next Post

இரு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் – நாளை புதுச்சேரி மற்றும் மதுரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies