ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதனால் ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
ஈரானில் உள்ள இந்தியர்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்களுக்கான அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
















