இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
விழாவில் பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி. சித்தர்கள், கவிஞர்கள் போன்றோர் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரி என தெரிவித்தார்.
மகாகவி பாரதியார் தேசியவாதத்தின் நெருப்பை புதுச்சேரியில் இருந்துதான் தொடங்கி வைத்தார் என்றும், மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் இணைந்து செயல்பட்டதால் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறினார்.
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
காங்கிரஸ் புதுச்சேரியை டெல்லியில் இருக்கின்ற ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ஏடிஎம் போல பயன்படுத்தியது என தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுகவின் தொடர் மோசடி தொடர் ஊழல்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என்றும்,
காங்கிரஸ், திமுகவும் புதுச்சேரியின் வளர்ச்சி பயணத்தை தடுக்கின்ற வேகத்தடையாக தான் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே சக்திகள் புதுச்சேரி வளர்ச்சியை தடுத்த அதே சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும, ஊழல் மற்றும் குற்ற செயல்கள் மிகுந்த அந்த கட்சிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வர வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எனக்கு தெரியும் என்றும் பிரதமர் குறப்பிட்டார்.
















