மதுரையில் தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.’
சென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு மையத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் இரவு முழுவதும் படித்து கொண்டு உடல்நலனை கெடுத்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
சரியான நேரத்தில் பாடங்களை படித்துவிட்டு வந்து தேர்வு எழுத வேண்டும் என்றும், மாணவர்களுக்கு பெற்றோர் எந்த ஒரு அழுத்தமும் கொடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், மதுரையில் பொதுத்தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியை கேட்டு வருத்தமடைந்ததாக கூறிய அமைச்சர், முடிந்து வரையில் அருகில் உள்ள தேர்வு மையங்கள் தான் ஒதுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
















