திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியில் அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை தனியே பெயர்ந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்பகுதியில் நிழற்குடையை திறந்து வைப்பதற்காக எம்.பி வருகை தந்தார். இவரது வருகையை முன்னிட்டு அப்பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டது,
இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு என எண்ணிய அப்பகுதியினர் சாலையை சோதனை செய்தனர்.
அப்போது தரமற்ற முறையில் இருந்த சாலை தனியே பெயர்ந்து வந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
















