ஜெருசலேமில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் ஆய்வு செய்தார்.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இதன் பிறகு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை குறித்து தெரியவில்லை எனவும் அந்த படையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டார். ஈரான் ஏவுகணை தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் நகரில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜெருசலேமின் மேற்குப் பகுதியில் உள்ள பெய்ட் ஷெமேஷ் நகரத்திற்கு நேரில் சென்று நெதன்யாகு ஆய்வு மேற்கொண்டார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டிருக்கலாம் என ஈரான் கூறியிருந்த நிலையில் அவர் ஆய்வு செய்த காட்சிகள் வெளியானதால் ஈரான் கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது.
















