புதுச்சேரி கடற்கரை பகுதியில் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான மாசி மக தீர்த்தவாரி வைபவம் வைத்திகுப்பம் கடற்கரை பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
மாசி மகம் தீர்த்தவாரியையொட்டி மைலம் முருகர், தீவனூர் விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த நிகழ்வில் லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து சுவாமிகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்தனர்.
















