ஈரானில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு பயிலும் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஈரான் கல்வி நிலையங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
















