ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பை சிதறடித்த இஸ்ரேல் - அமெரிக்கா! விவாதப்பொருளான சீனாவின் HQ-9B வான்பாதுகாப்பு அமைப்பு
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பை சிதறடித்த இஸ்ரேல் – அமெரிக்கா! விவாதப்பொருளான சீனாவின் HQ-9B வான்பாதுகாப்பு அமைப்பு

Manikandan by Manikandan
Mar 3, 2026, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஈரானின் முக்கிய அணு மற்றும் ராணுவ தளங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சீன தயாரிப்பான HQ-9B என்ற ஈரான் வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்திறன் மீண்டும் சர்ச்சையின் மையமாகியுள்ளது.

அணு திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆதிக்கப் போட்டியை மையமாகக் கொண்டு, மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது ஒருங்கிணைந்த வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்கள் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையைப் பற்றிய உலகளாவிய கவலைகளை அதிகரித்துள்ளன. இதனிடையே, ஈரானின் வான் பாதுகாப்பு திறன், அதற்கு ஆதரவாக உள்ள வெளிநாட்டு ஆயுத தொழில்நுட்பங்கள், மற்றும் மேற்கு நாடுகளின் துல்லியமான தாக்குதல் திறன்கள் ஆகியவை மீண்டும் சர்வதேச விவாதத்தின் மையமாக மாறியுள்ளன.

குறிப்பாக ஈரானின் 20 மாகாணங்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்களில், உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி வசித்து வந்த வளாகம், அணு நிலையங்கள் உட்பட பல முக்கிய தளங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனிடையே, இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள சமீபத்தில் சீனாவிடம் இருந்து பெற்றதாக கூறப்படும், HQ-9B என்ற வான் பாதுகாப்பு அமைப்பை ஈரான் தனது அணு நிலையங்களை சுற்றி நிலை நிறுத்தியிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க அந்த அமைப்பால் இயலவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், HQ-9B வான் பாதுகாப்பு அமைப்பை தாங்கள் ஈரானுக்கு வழங்கவில்லை என சீனா அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரத்தில் HQ-9B, S-300 PMU-2 மற்றும் Bavar-373 போன்றவையும், நடுத்தர தூரத்தில் Khordad-15 மற்றும் Raad போன்றவையும், குறுகிய தூரத்தில் Tor-M2, Pantsir-S1 போன்றவையும் செயல்படுகின்றன. இருந்தபோதிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில், பல ஏவுகணைகள் இந்த பாதுகாப்பு வளையத்தை கடந்து தாக்கியதாக கூறப்படுகிறது. Natanz மற்றும் Fordow போன்ற அணு நிலையங்கள், புரட்சிகர காவல் படை ஏவுகணை தளங்கள் மற்றும் டெஹ்ரான் அருகிலுள்ள விமான தளங்கள் ஆகியவை இந்த தாக்குதலின் முக்கிய இலக்குகளாக இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தான் தளங்கள் மீது இந்தியா நடத்திய “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போதும், இந்த HQ-9B வான் பாதுகாப்பு அமைப்பு பயனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

சீனாவின் Aerospace Science and Industry Corporation உருவாக்கிய HQ-9B, ரஷ்யாவின் S-300 மற்றும் அமெரிக்காவின் Patriot PAC-2 அமைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணை எதிர்ப்பு அமைப்பாகும். இது சுமார் 260 கிலோ மீட்டர் தூரமும், 50 கிலோ மீட்டர் உயரமும் சென்று இலக்குகளை குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஒரே நேரத்தில் 100 இலக்குகளை கண்காணித்து, 6 முதல் 8 இலக்குகள் வரை தாக்கி அழிக்கும் திறன் இதற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஈரான் மீதான இந்த தாக்குதல்கள், ஈரானின் வான் பாதுகாப்பு திறன், சீன ஆயுத தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை மற்றும் மேற்கு நாடுகளின் மேம்பட்ட தாக்குதல் தொழில்நுட்பங்கள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

Tags: defense systemIsrael-US debateHQ9B air defense systemchinaIranChina'sair
Share
Tweet
SendShare
Previous Post

ஈரானில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறலாம் – ஈரான் அரசு

Next Post

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் – மேற்காசியா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies