விருதுநகரில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, திமுக திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பெரியார் பாளையம் பகுதியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி போன்ற எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல், இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்னதானம் வழங்குவதற்காக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அப்பகுதிக்கு வருவதை அறிந்த 80-க்கும் மேற்பட்ட பெண்கள், அவரை முற்றுகையிடத் திரண்டனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால், பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
















