துபாயில் கடந்த 4 நாட்களாக சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளுடன், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தடைந்தது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, கடந்த சனிக்கிழமை முதல் மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், துபாயில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, துபாயில் சிக்கித் தவித்த 217 பயணிகள் எமிரேட்ஸ் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில், 2வது நாளாக 314 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
இவர்களில் பெரும்பாலான பயணிகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்னைக்கு ட்ரான்சிட் விமானத்தில் துபாய்க்கு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. துபாயில் இருந்து வந்த தங்கள் உறவினர்களை, அவரவர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
















