தமிழுக்காக திமுக என்ன செய்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரம்ப கல்வியை தமிழில் கற்று கொள்ள வேண்டும் என மும்மொழி கல்வி கொள்கை கூறுகிறது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்றும், பிரதமர் மோடி தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவை வீட்டிற்கு அனுப்புவதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















