சிவகங்கை அருகே இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் காலில் முறிவு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், அழகர் ஆகிய இருவரும் பணி முடிந்து இருசக்கர வானத்தில் வீடு திரும்பியபோது 3 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதனை தட்டிக்கேட்டதால், அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெல்சன், குணா உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதில், ஆகாஷ் டெல்சனையும், குணாவையும் கைது செய்த போலீசார் அவர்களை விசாரனைக்காக அழைத்து சென்றனர். அப்போது ஆகாஷ் டெல்சன் போலீசிடமிருந்து தப்ப முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, காலில் மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
















