மேற்குவங்க ஆளுராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்தார்.
அப்போது அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடினார். இதனை தொடர்ந்து ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சரை ஆளுநர் வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
















