மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி கோயிலுக்கு வருகை தந்த அண்ணாமலைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் மற்றும் பரிகார தெய்வங்களை அண்ணாமலை வணங்கி வழிபட்டார்.
பின்னர் கோ சாலை சென்ற அண்ணாமலை அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பசுமாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் வாழைப்பழங்களை வழங்கினார்.
















