முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு தானும் ரசிகன் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற தாய் கழகத்திற்கு திரும்பும் இணைப்பு பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தாமதமாக இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வம் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சில காலத்திற்கு முன்பு வரை ஓ.பி.எஸ் இங்கு இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என தெரிவித்த முதலமைச்சர், தாய் மடிக்கு திரும்பியுள்ள ஓபிஎஸ் மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கு தானும் ஒரு ரசிகன் தான் என பெருமிதம் தெரிவித்தார்.
















