தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
வளைகுடா நாடான துபாயில் போர்ச் சூழல் சிக்கித் தவித்த கோவை மண்டலத்தைச் சேர்ந்த 12 பேரை, பத்திரமாகத் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கோவை விமான நிலையத்தில் நேரில் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அளிப்பது வழக்கமான நடைமுறை என தெரிவித்தார்.
புதிய அரசியல் கட்சி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துள்ளது என்றால் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்று யாராவது நம்ப முடியுமா? என்றும் அவர் கூறினார்.
விஜய் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும், எனவே வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் ஒரு பெண்ணாக எது கொடுத்தாலும் பெண்களுக்கு சரி என்று சொல்லுவோம் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
















