ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் முஜ்தபா கமேனி , அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்கான அவை நேற்று கூடியது. அதில் புதிய உச்ச தலைவராக 56 வயதான முஜ்தபா கமேனியை தேர்ந்தெடுத்தது.
முஜ்தபா கமேனி பல தசாப்தங்களாக ஈரானின் அதிகார மையத்தில் நிழல் மனிதராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் இவர் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் உச்சத்தில் இருக்கும் வேளையில், மிகவும் தீவிரவாதப் போக்கு கொண்ட முஜ்தபா கமேனியின் நியமனம் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், மன்னராட்சியை எதிர்த்து உருவான ஈரானிய குடியரசில், தற்போது தந்தைக்கடுத்து மகன் பதவிக்கு வந்திருப்பது அந்நாட்டுக்குள்ளேயே விவாதங்களை எழுப்பியுள்ளது.
















